பல் வகை கவிதை

வலிக்கும் இதயத்தின்             கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!

------------

காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!

உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!

&

வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185

----------------

நீ....
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!

மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!

எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
பதிவு -201
கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S)

---------

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!
^^^^^
நான் 
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!
^^^^^
காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!

----

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

^^^^^

கண்ணுக்குள்.... 
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

^^^^^

என் காதல் நினைவு 
உன் காதல் நினைவு 
எப்படி தாங்கும் என் 
இதயம் ....!!!

^^^^^^

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்

தாயின் கையை தட்டி விட்டது குழந்தை

நிலா சோறு

&

கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

--------------

வயல் நிலங்கள் வெடித்தது

வறட்சியால் பயிர்கள் இறப்பு

வெட்டிய மரங்களின் சாபம்

&

கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

--------

நிலத்தில் கோடுகள்

வறுமை கோடானது

நீடிய வறட்சி

&

கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

----------

பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?

என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!

கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!

பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!

@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

---------

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

-----

கடத்தல்காரன் கையில் பணம் 
வன அதிகாரிகள் பாராமுகம் 
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் 

------

காடழிப்பு 
ஆற்று நீர் ஆவியானது 
புலம்பெயரும் அகதியானது கொக்கு 


-------

குடும்ப தலைவர் மரணம் 
ஒன்பது பிள்ளைகளும் ஓலம் 
கருத்தடை செய்த நாய் சாபம் 

--------


சட்டம் ஒரு இருட்டறை 
கருவறை இருட்டறை 
சிசு மர்மக்கொலை

---------

வியர்வை சிந்தாமல் வேண்டாம் 
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் 
ஊதியம்

---------

கண் வரைதல் ஓவிய போட்டி 
முதல் பரிசு பெற்றான் மாணவன் 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி

------------

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே

பூசகரும் பூரண சைவம்

கோயிலில் மச்ச அவதார சிலை

& கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

-------

பண்பாடுகள் பாழாய் போகிறது

கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு

&

கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

-----------

தீப திரு நாளில்......
தீய எண்ணத்த எரித்துவிடு.....
தீய செயலை தூக்கியெறி......
தீய பார்வையை மறைத்துவிடு.....
தீய பேச்சை துப்பியெறி......
தீய தொழிலை செய்யாதே......!

தீங்கு செய்வாரோடு சேராதே......
தீச்சொல் கூறி திரியாதே.......
தீயவை எல்லாம் ஒழித்துவிடு.......
தீப காந்திகல்போல் வாழ்........
தீம் சொல்லால் பேசு..........
தீரம் கொண்டசெயல் செய்.....
தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....!

&
இனிய
இனிப்பான
இனிய தீபாதிருநாளின்
இனியவனின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

தேனிலும் இனியது காதலே

------

பட்டாம் 
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!

பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!

என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை 
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
தேனிலும் இனியது காதலே 

------

மன்னித்துவிடு ....
உன் அனுமதி இல்லாமல் ....
உன்னை என் இதயத்தில் ....
குடியமர்த்தி விட்டேன் .....!!!

எனக்கு உன் அனுமதி ....
கேட்டெல்லாம் உன்னோடு ....
பேச முடியாது -நான் ...
நினைக்கும் போதெல்லாம் ....
உன்னோடு பேசவேண்டும் 
என்பதால் இதயத்துக்குள் ....
உன்னோடு வாழ்கிறேன் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
தேனிலும் இனியது காதலே 


-----

உனக்காக காத்திருந்து ... 
களைத்து விட்டேன் .. 
உன்னை இழக்க மாட்டேன் ... 
அடிக்கடி வருவாய் ... !!!

நினைவிலும் கனவிலும் ... 
நிச்சயம் வருவாய் ....
நினைவில் வரும் போது 
உன்னை ரசிப்பேன் .. 
கனவில் வரும் போது ....
உன்னோடு பேசுவேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
தேனிலும் இனியது காதலே 

------

என் உடம்பில் ....
எத்தனை மறுக்கள்.....
எத்தனை மச்சங்கள் .....
என்று கேட்க்கிறாய் ....?

நீ 
என்னை கிள்ளிய ......
அத்தனை இடங்களிலும் .....
மறுக்கலும் மச்சங்களும்.....
தான் உயிரே .......!!!

 &
என்னவளே என் கவிதை

-----------

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

​&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

-------

நீ 
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

-----

மழை பெய்யும் போது.....

இரு கரத்தை குவித்து......

உள்ளங்கையில் மழை.....

துளியை ஏந்தும்போது....

இதயத்தில் ஒரு இன்பம்....

தோன்றுமே அதேபோல்.....

உன்னை யாரென்று.....

தெரியாமல் இருந்த நொடியில்.....

நீ என்னை திடீரென பார்த்த..... கணப்பொழுது........!!!

என்னவனே என்னை.....

புதைத்துவிட்டேன் உன்னில்....!!!

^^^

என்னவனே என் கள்வனே 03

காதல் ஒரு அடிப்படை தேவை

கவிப்புயல் இனியவன்

சமூக சிந்தனை கவிதைகள்

-------

நல்ல பழங்களை .....
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!

பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 

------

ஓடுகின்ற பேரூந்திலே 
ஓடி ஓடி ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

பாழடைந்த கிணற்றுக்குள் ......
நுனிவிரலில் நின்றுஉன்னை 
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?

உன்னை ......
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்


------

பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
----------

பாசத்தோடும் ....
அன்போடும் ......
இரக்கத்தோடும் ....
வளர்த்த குழந்தையிடம் 
எதிர்பார்ப்புடனும் ...
ஒரு கேள்வி கேட்டேன்...??
*
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
*
ஒரு நொடி கூட தயங்காமல் ...
தோழியின் பெயரைச் சொல்லி...
நட்பைப்....

பெருமைப்படுத்திவிட்டாள் ...!!!

^^^

போடா இனிமேல் ...
வாழ்க்கையில் பேசாதே 
நீ ஒரு மனிதனா ...?
நான் செத்தாலும் என் ..
முகத்தில் முழிக்காதே ...
எவ்வளவு கேவலமாய் ........
திட்டினாலும்........!!!

சிரித்துகொண்டேதான்
பதிலளித்தான் ..
உன்னைவிட்டால் எனக்கு ..
யாரடா இருக்கிறார்கள் ..?
என் உயிர் நண்பன் ..
இந்த சொல் என்னையே 
கொன்று விருக்கிறது .......!!!

^^^
வருடங்கள் மாறும் 
பருவங்கள் மாறும் 
எண்ணங்கள் மாறும் 
உருவங்கள் மாறும் ...
ஊர்கள் மாறும் ...
தேசங்கள் மாறும் ...
தேகம் கூடமாறும் ...
மாறாது மாறாது ...
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது...
நம் உன்னத நட்பு.....!!!

&

கவிப்புயல் , கவி நாட்டியரசர் 
+ + + இனியவன் + + +

கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!

என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக பட்சகோரிக்கை .....
நீயே வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

---------------------

முதுமையின் வலிகள்
----------------------------
முதுமை.....
இளமையின் நினைவை.....
எரிந்த சாம்பலாய்.....
சுமர்ந்து கொண்டிருக்கும்....
சுமைதாங்கி..........!

மரணத்தின் வாசலை.......
ஏக்கத்தோடும் பயத்தோடும்.......
வரவேற்றுக்கொண்டிருக்கும்......
மர்ம அறை............!

அனுபவங்களை.......
முற்களாகவும்......
பூக்களாகவும்......
ரசித்துக்கொண்டிருக்கும்.....
ரோஜாச்செடி.....!

வார்த்தைகளின்.....
வீரியமும்.......
இன்பங்களின்.......
வீரியமும்......
அடங்கியிருக்கும்.......
பெட்டிப்பாம்பு..........!

எழும்பு கூட்டை.....
தோலால் மறைத்து வைத்து......
கிறுக்கள் சித்திரத்துக்கு......
உயிர் கொடுக்கும்.....
உன்னதமான உயிர்.........!

நூறு மீற்றர் ஓட்டத்தை......
நொடிக்குள் ஓடியவனும்.....
மெதுவாக நடக்க ....
கற்றுக்கொடுக்கும் ஆசான்......!

கொரட்டைத்தான் .......
மூச்சு பயிற்சி........
இருமல் தான் செய்தி.....
தொடர்பாளன்........!

அனுபவத்தை மூலதனமாய்......
கொண்டு ஞானியாகும் நிலை.....
அனுபவத்தை தவறாக கொண்டு......
பித்தனாகும் நிலை.......
முதுமை.....................!

@
கவிப்புயல் இனியவன்