கஸல் கவிதை

காதலில் பாத சுவடு .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

-----------

நெருப்பாக நீ இரு ....
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!

என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!

உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 


--------

காதல் 
கடல் போன்றது ....
உண்மைதான் ...
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

நீ 
பேசிய நாள் ...
பௌணமி ...
பேசிய வார்த்தை ...
அமாவாசை .....!!!

காதல் ...
திருமண அழைப்பிதல் ...
வரும் வரை தான் ....
இன்பம் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

------


காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!


நீ 
காதல் தரவில்லை 
காதல் தான் உன்னை 
எனக்கு தந்தது .....!!!


காதல் பூ 
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 

-------

கவிதைகள்

காயப்படுத்தி....

இருந்தால் ........

என்னை .....

மன்னித்துவிடு......

எல்லா நேரமும் ..........

கற்பனையில் ...............

எழுதமுடியது ....!!!

உனக்கு நான் தந்த .....

திருமணபரிசுபோல்.....

யாரும் தரமுடியது.....

என்னையே விட்டு .....

கொடுத்துவிட்டேன்........!!!

காதலின் பனிதுளி.....

கண்ணீர் .........

நிலாவின் கண்ணீர்......

பனித்துளி.........!!!

--------

& முள்ளில் மலரும் பூக்கள்

காதல் கஸல் கவிதை 1065

கவிப்புயல் இனியவன்

----

நீ

ரோஜா ஐயமில்லை

இதழா..? முள்ளா...?

அதுவே ஐயம்....!!!

என்னை காதலித்தால்......

கவிதைவரும்.....

கத்தரித்தால்......

கல்வெட்டு வரும்.....!!!

உன் விருப்பப்படி....

கண்ணுக்கு படாத.....

தூரத்துக்கு சென்று....

விட்டேன் -என் விருபபப்படி......... இதயத்திலிருந்து.....

எடுத்துவிடு.......!!!

-------


& முள்ளில் மலரும் பூக்கள்

காதல் கஸல் கவிதை 1066

கவிப்புயல் இனியவன்

---------------------------------------------

இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!

என்  கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!

மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^